ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்

நடந்து சென்ற பெண்களிடம்   சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற மதுப்பிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் கட்டிப் போட்டு வைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து கட்டி வைத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

  திண்டுக்கல்லில் கூலி வேலை செய்யும் பெண்கள் பணி முடிந்து வீட்டிற்கு  செல்வதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்கீம் ரோட்டில்  நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை பின் தொடர்ந்து குடிபோதையில் தள்ளாடியபடி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் திடீரென  நடந்து சென்ற பெண்களிடம்   சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். இதனால் பயந்து போன அந்தப் பெண்கள் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டிப் போட்டு வைத்தனர்.

  பின்னர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  அவரிடம் விசாரணை செய்ததில் நத்தத்தை சேர்ந்த ஆறுமுகம் என்றும் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.

  இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து மதுப்பிரியரை காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

  செய்தியாளர் : சங்கர்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Alcohol, Dindigul