Home /News /tamil-nadu /

சிங்கிள்ஸ் உஷார்.. மேட்ரிமோனியில் வலை விரித்த மோசடி பெண் - போலீஸில் பிடித்துக்கொடுத்த மாப்பிள்ளை

சிங்கிள்ஸ் உஷார்.. மேட்ரிமோனியில் வலை விரித்த மோசடி பெண் - போலீஸில் பிடித்துக்கொடுத்த மாப்பிள்ளை

மோசடி பெண்

மோசடி பெண்

பாண்டிச்சேரி சென்று அந்தப்பெண் குறித்து விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.

    பாண்டிச்சேரியை சேர்ந்த பெண் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததையடுத்து அவரை  பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாப்பிள்ளை.

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் திருமணம் செய்வதற்காக கௌரி மேட்ரிமோனி மூலம் பெண்ணைத் தேடி உள்ளார். அப்பொழுது இடைத்தரகர்கள் மூலம் பாண்டிச்சேரி  நேரு தெருவை சேர்ந்த  சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்பொழுது தனக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாக பெண் சோபிகா கூறி உள்ளார்.

    Also Read:  திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த அரசுப்பேருந்து..பதறவைக்கும் காட்சிகள் - மீட்புப்பணிகள் தீவிரம்

    இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த 11.03.21 அன்று எளிமையான முறையில் பாண்டிச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் செயின், பட்டுப்புடவை, 25000 ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார். அதன்பின் சோபிகாவிடமிருந்து கடந்த 5 மாதங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என கூறியுள்ளனர் இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Also Read:  பகலில் கூட பெண்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

    இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி சோபிகாவின் உறவினரை தொடர்புகொண்டு  திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும் ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் இதனையடுத்து நேற்று (10.08.21) திண்டுக்கல் வருகை தந்த சோபிகாவை கையும் களவுமாக பிடித்தார்.  மோசடி செய்தது தொடர்பாக கேட்டபொழுது  சோபிகா தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டார். மேலும் செல்லப்பாண்டியிடம் வாங்கிய நகை பட்டுப்புடவை பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை ஏற்காத செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த சோபிகா மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பெண்ணை தந்திரமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Matrimony, Woman

    அடுத்த செய்தி