மாசடைந்து கழிவு நீர் போல காணப்படும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி... தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
மாசடைந்து கழிவு நீர் போல காணப்படும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி... தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
நட்சத்திர ஏரி
Kodaikanal Star Lake | கொடைக்கானல் ஏரியை தூய்மை படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்து ஏரியை தூய்மைப்படுத்துவது என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக நகரின் மத்தியப் பகுதியில் நட்சத்திர வடிவிலான ஏரி அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வாடிக்கையான ஒன்றாகும். மேலும் இந்த ஏரியைச் சுற்றியுள்ள சாலையில் ஏரியின் அழகினை ரசித்து நடைபயிற்சி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்வது வாடிக்கை, உலக சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இந்த ஏரி முழுவதும் நீர்தாவரங்களால் முழுவதும் மாசடைந்துள்ளது.
குடிமகன்கள் குடித்து விட்டு ஏரியில் மதுபான பாட்டில்களை வீசுவதாலும், ஏரியைச் சுற்றிலும் உள்ள விடுதி மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலப்பதாலும், சுற்றுலாப் பயணிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஷ்டிக் பொருட்கள் ஏரியில் வீசப்படுவதாலும் ஏரியில் உள்ள நீர் மாசடைந்து கழிவு நீர் போல காட்சி தருகிறது, உலக மக்களால் அதிகம் விரும்பப்படும் இந்த ஏரியை தூய்மைப் படுத்த கடந்த காலங்களில் சுமார் 88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றளவிலும் ஏரியை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறவில்லை.
அவ்வப்போது சமூக ஆர்வலர்களால் ஏரியில் உள்ள பிளாஷ்டிக் மற்றும் மதுபாட்டில்கள் மட்டும் அகற்றப்படுகின்றன. ஆனால் மாசடைந்துள்ள நீரை தூய்மை படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க வில்லை என்பது தான் உண்மை. கொடைக்கானல் ஏரியை தூய்மை படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்து ஏரியை தூய்மைப்படுத்துவதுடன் போர்க்கால அடிப்படையில் ஏரியில் படர்ந்துள்ள நீர்த்தாவரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்- ஜாபர்சாதிக்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.