திண்டுக்கல்லில் காவலர் பயிற்சிப் பள்ளியில் வயிற்று வலி காரணமாக காவலர் அதிக அளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதகவுண்டன்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (22) இவர் காவலர் பணிக்கு தேர்வு ஆனார். தற்பொழுது திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலருக்கான பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென சுபாஷ் அதிக அளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பயிற்சி பள்ளியில் இருந்த போலீசார் சுபாஷை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது பயிற்சி காவலர் சுபாஷ் குடலிறக்கம் நோய் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்நிலையில் தனக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் வலி தாங்காமல் மனமுடைந்த சுபாஷ் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் | Shawarma: தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
செய்தியாளர் : சங்கர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Suicide attempt