Home /News /tamil-nadu /

சினிமா பாணியில் டாக்டர் வீட்டில் 280 பவுன் நகைகள் கொள்ளை - வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையா?

சினிமா பாணியில் டாக்டர் வீட்டில் 280 பவுன் நகைகள் கொள்ளை - வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையா?

டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்

டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்

Ottanchathiram: டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

    ஒட்டன்சத்திரத்தில் வீடு புகுந்து டாக்டர் தம்பதியினரை கட்டிப்போட்டு தங்க நகைகள்  25 லட்சம் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-  தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உட்பட 4 பேர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

    வீட்டில் இருந்த மருத்துவர் உட்பட நான்கு பேரை கட்டிப்போட்டு வீட்டில் பீரோவில் இருந்த 280 பவுன் தங்க நகைகள், ரூ 25 இலட்சம் பணம் மற்றும் இன்னோவா கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Also Read:  நள்ளிரவில் மனைவியுடன் படுக்கையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ - அதிர்ந்துபோன கணவன்.. கன்னியாகுமரியில் பரபரப்பு..

    கொள்ளையடித்து சென்றவர்களை வடமாநிலத்தவரா என்ற கோணத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Doctor, Gold Theft, Luxurious cars, Theft

    அடுத்த செய்தி