Home /News /tamil-nadu /

Pepper price | மிளகு வரத்து குறைந்ததால் இருமடங்கு விலை உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

Pepper price | மிளகு வரத்து குறைந்ததால் இருமடங்கு விலை உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

மிளகு

மிளகு

திண்டுக்கல் சிறுமலைப்பகுதியில் விளையும் மிளகு வரத்து குறைவு மற்றும் தரம் காரணமாக, இருமடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.500 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    திண்டுக்கல் அருகேயுள்ளது சிறுமலை. இது கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும். இம்மலை கடல் மட்டத்திலிருந்து 729 மீட்டர் உயரத்திலும் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு மிகவும் ரம்மியமாக ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.  இந்த சிறுமலை 55000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சிறுமலையில் வசித்து வருகின்றனர். இங்கு விளையும் சிறுமலை வாழை, பலா உள்ளிட்ட பழ வகைகள் மிகுந்த சுவையுள்ளது.

    இங்கு காப்பி, மிளகு உள்ளிட்ட வாசனை பொருட்கள் பணப்பயிராக  விளைகின்றன. ஒரு ஏக்கர் 2 ஏக்கர் உள்ள சிறு குறு விவசாயிகள் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். கடந்த காலத்தில்  போதிய மழை இன்மையாலும் வெயிலில் தரமற்ற மிளகு விளைந்து 1 கிலோ 200 ரூபாய்க்கு மட்டும் விற்பனை ஆகியது. இதனால் விலை மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்ததன் காரணமாக  தரமான மிளகு விளைந்துள்ளன. ஆனால் பருவ மழை பெய்ததன் காரணமாகவும் பூ மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்தன் காரணமாகவும் விளைச்சல் குறைந்தாலும் மிளகு விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைக்கும் போது மிளகின் வரத்து குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தனிமனித இடைவெளியுடன் மது குடிப்போம்... டாஸ்மாக் கடை முன்பு உறுதிமொழி எடுத்த மதுப்பிரியர்கள்...

    கொரானா காலத்தில்  இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பு கொண்ட வாசனை பொருட்கள்  விலை ஏற்றம் காணப்படாலும் மூன்று ஆண்டுகளாக விலை வீழ்ச்சியடைந்த மிளகு இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இந்த விலை உயர்வு ஓரளவு ஈடு செய்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Pepper

    அடுத்த செய்தி