• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Dindigul Ration shop | திண்டுக்கல்லில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் மோசடி.. பொதுமக்கள் புகார்..

Dindigul Ration shop | திண்டுக்கல்லில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் மோசடி.. பொதுமக்கள் புகார்..

Youtube Video

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல ரேஷன் கடைகளில் பொருட்களை எடை நிறுத்தி போடாமல், சில ஊழியர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

  • Share this:
    கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி, அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்க அரசு இவற்றை வழங்கும் நிலையில், இதிலும் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் கூட்டத்தை விட, இந்த ஊரடங்கு காலத்தில் ரேஷன் பொருட்களை வாங்க அதிகளவில் மக்கள் வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சில ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மோசடி செய்வதாக கூறப்படுகிறது.

    ரேஷன் பொருட்களை அளவீடு செய்து விநியோகிப்பதற்காக டிஜிட்டல் எடை மெஷின்கள் பயன்பாட்டில் இருந்தாலும், அதனைப் பயன்படுத்தாமல், இவர்கள் ரேஷன் பொருட்களை குத்துமதிப்பாக அளந்து விநியோகிக்கின்றனர். மேலும், ரேஷன் கடைகளுக்கு வரும் கூட்டமும் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பான இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 07, 2021)

    குறிப்பாக ஒய்.எம்.ஆர்.பட்டி ரேஷன் கடை, பெரிய கடை வீதி ரேஷன் கடை, ஸ்கீம் ரோடு ரேஷன் கடை உள்ளிட்ட சில கடைகளில் இந்த எடை மோசடி நடைபெறுகிறது. இதனை தட்டிக் கேட்க தைரியமில்லாமல் பலரும், வேறு வழியின்றி வாங்கிச் செல்கிறார்கள்.



    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மாவட்டத்தில் நடைபெறும் இந்த முறைகேட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

     செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: