• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரே குடும்பத்தினர் மர்ம மரணம் - பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்!

ஒரே குடும்பத்தினர் மர்ம மரணம் - பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

இன்று (21.08.21) அதிகாலை வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தில் இருந்து பழனி தீயணைப்பு துறையினருக்கு மக்காச் சோளத் தட்டையில் தீப்பிடித்து எரிவதாக போன் வந்தது.

  • Share this:
    பழனியில் விவசாயி குடும்பத்துடன் தீயில் கருகி உயிரிழந்த வழக்கு- பிரேதப் பரிசோதனை முடிவில் நான்கு பேரும் விஷம் அருந்தியது தகவல் கிடைத்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வத்த கவுண்டன் வலசு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம சாவு அடைந்தனர். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர்  சின்னராசு என்கிற முருகேசன் (52) விவசாயி.  இவரது மனைவி வளர்மதி (45) இவர்களுக்கு சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    Also read: தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தல்?

    இந்நிலையில் இன்று (21.08.21) அதிகாலை வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தில் இருந்து பழனி தீயணைப்பு துறையினருக்கு மக்காச் சோளத் தட்டையில் தீப்பிடித்து எரிவதாக போன் வந்தது.

    இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.  அப்பொழுது மக்காச் சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் ஆயக்குடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    Also read:   தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் – 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்து போனது முருகேசன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்திகேயன் என தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக  தென் மண்டல ஐஜி அன்பு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் வருகை தந்து விசாரணை நடத்தினர்,  சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஆயக்குடி காவல் நிலைய போலீசார் பின்னர் இறந்துபோன 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    Also Read:  தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!

    பிரேத பரிசோதனையை டாக்டர்கள் முத்துக்குமார் மற்றும் சித்திக் ஆகியோர் மேற்க்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில் இறந்த நான்கு பேருமே ஏற்கனவே விஷமருந்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

    உயிரிழந்தவர்கள் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு எதுவும் குடும்ப பிரச்சினை உள்ளதா என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையை மேற்க்கொண்டுவருகின்றனர். விவசாயி ஒருவர் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: