Home /News /tamil-nadu /

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ஹார்னமென்டல் செர்ரி மலர் - சுற்றுலா பயணிகள் ஆர்வம்

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ஹார்னமென்டல் செர்ரி மலர் - சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஹார்னமென்டல் செர்ரி

ஹார்னமென்டல் செர்ரி

Kodaikanal : மரத்தில் உள்ள ஹார்னமெண்டல் செர்ரி மலர் பிரையன்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும்  ஹார்னமென்டல் செர்ரி மலர், மரம் முழுவதும் பூத்து குலுங்குவதை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக ஹார்னமென்டல்  செர்ரி மலர் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் பூத்து குலுங்குகின்றது. இந்த பூவானது மரத்தில் பூக்கக்கூடிய அரியவகை பூ ஆகும்.

    ஆண்டு முழுவதும் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரம், டிசம்பர் மாதத்தில் மலர் மொட்டுக்கள் உருவாகி மரத்தின் அனைத்து இலைகளையும் உதிர்க்கத்துவங்கி, டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாத ஆரம்பத்திலும்  அனைத்து மொட்டுக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து மரம்  முழுவதும் ரோஸ் நிறமாக மாறி காண்பவர் கண்ணை கவரும் வண்ணத்தில் காட்சியளித்து வருகிறது.

    இந்த மரத்தில் உள்ள ஹார்னமெண்டல் செர்ரி மலர் பிரையன்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மரத்தின் அருகே நின்று புகைப்படம் எடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர் .

    Must Read : தாய் கோழிக்கு நீதி வேண்டி காவல்நிலையம் வந்த சிறுமி

    மேலும் தற்பொழுது  இந்த (மார்கழிப்பூ) ஹார்னமெண்டல் செர்ரி மலர்கள் மட்டும் மரம் முழுவதும் பூத்து உள்ளது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

    செய்தியாளர் : ஜாபர்சாதிக் ( கொடைக்கானல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dindigul, Kodaikanal, Park

    அடுத்த செய்தி