மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் 150க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் 3 மணி நேரம் அடைத்து சாலையின் இருபுறங்களிலும் கையில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தர நிர்ணய ஆணையம் நகைக் கடைகள் மூலம் விற்கப்படும் தங்க நகைகளுக்கு புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இந்தியாவில் புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய 256 மாவட்டங்களிலும் தங்கநகைகள் விற்பனையின் போது தர முத்திரை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also read: விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
தர முத்திரை வழங்கும் மையங்களில் போதிய வசதிகளும் அதற்கான உபகரணங்கள் இல்லாததால் முத்திரை பெறுவதற்காக பல நாட்களுக்கு காத்திருக்க வேண்டி இருப்பதால் தங்களது வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
இதனால் தங்க நகைகள் தேக்கமடைந்து விற்பனை பாதிப்பதுடன், நகை வாங்குவோரின் தனி விபரங்களையும் அளிக்க வேண்டியிருப்பதால் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமையும், அவர்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே மத்திய அரசு இத்திட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று 23.08.21 திண்டுக்கல் நகரில் உள்ள 150க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் காலை 11:30 வரை 3 மணி நேரம் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களுக்கு ஆதரவாக தங்க நகைகள் செய்யும் பட்டறை உரிமையாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.