கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி.. நைஜீரியா இளைஞர் கைது.

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி.. நைஜீரியா இளைஞர் கைது.

திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி செய்த நைஜீரியா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவருக்கு முகநூல் வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா வயது 35 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில மாத பழக்கத்திலேயே கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக உச்சனா கூறியுள்ளார். இதற்காக ரூ.4 லட்சம் வேண்டும் என உச்சனா கேட்டுள்ளார். இதனையடுத்து வெங்கடாசலம் ரூ.4 லட்சம் அவரது வங்கி கணக்கிற்கு பண மாற்றம் செய்துள்ளார்.

Also read: சேலத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் 6 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி: புதிய கட்டுபாடுகள் விதித்து கலெக்டர் உத்தரவு

அதன்பின் வெங்கடாசல தால் உச்சனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து உச்சனாவை தேடி வந்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மறைந்திருந்த உச்சனாவை போலீசார் இன்று 08.08.21 கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
Published by:Esakki Raja
First published: