Home /News /tamil-nadu /

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய், மகன் கொடூர கொலை.. போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய், மகன் கொடூர கொலை.. போலீசார் தீவிர விசாரணை

விசாரணை செய்யும் போலீசார்

விசாரணை செய்யும் போலீசார்

Dindigul District : சம்பவத்திற்கு  தடயவியல்  நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ரூபி  வரவழைக்கப்பட்டு எதற்காக கொலை நடந்தது கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குருக்களையன்பட்டியில் தோட்டத்தில் வீட்டில் வசித்த தாய், மகன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஏரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(40), இவருக்கு திருமணமாகி சுபஹாஸ்மி 24 எண்ற மனைவி 5 வயது மகன் உள்ளனர். இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக  இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தங்கி  விவசாயம் செய்து வருகிறார்.

நேற்றிரவு தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள்(60) என்பவருடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார்கள். இன்று அதிகாலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் வந்துள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.

ALSO READ |  'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு
 இதையடுத்து சம்பவ இடத்திற்கு எரியோடு போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, ஆகியோர் வந்தனர். மேலும் சம்பவத்திற்கு  தடயவியல்  நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ரூபி  வரவழைக்கப்பட்டு எதற்காக கொலை நடந்தது கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




முன்விரோதம் காரணமாக கொலை எதும் நடைபெற்றதா அல்லது இவர்களது தோட்டத்தில் தேங்காய் பறிக்க 4 தினங்களுக்கு முன்பு று தோப்பூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் தென்னைமரம் ஏறி கீழே விழுந்ததில் உயிர் இழந்த பிரச்னை காரணமா என்ற கோணத்தில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து கொலைக் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தாயும், மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்தியாளர் : சங்கர்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dindigul

அடுத்த செய்தி