ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Kodaikanal: கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக நீர்வீழ்ச்சிகள் - சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்ப்பு..

Kodaikanal: கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக நீர்வீழ்ச்சிகள் - சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்ப்பு..

 கொடைக்கானல் நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி

Kodaikanal Tourism | மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நீர்வீழ்ச்சி நகரமாக மாறியிருக்கிறது கொடைக்கானல் மலைப்பகுதி. 50க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை, மற்றும் மிதமான மழை பெய்து வந்தது, இந்த தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகளுக்குச் செல்லும் ஓடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்திலும் நீர்வரத்து அதிக‌ரித்துள்ள‌தால் கொடைக்கானல் நகர்பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை நீர் வீழ்ச்சி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் சீராக‌  கொட்டுகின்றது.

மேலும் மலைகளின் இளவரசியை மெருகூட்டும் விதமாக புலிச்சோலை, செண்பகனூர், பெருமாள்மலை, பேத்துப்பாறை, மேல்மலை கிராமங்களான போளூர், கூக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே புதியதாக சிறு சிறு அருவிகளும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக தோன்றி நீர்வீழ்ச்சி நகரமாகவே மலைப்பகுதிகள் மாறி, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது,  இந்த அருவிகளில் சீராக‌ கொட்டும் நீரை கண்டு பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் புகைப்ப‌ட‌ம் ம‌ற்றும் செல்பி எடுத்து ம‌கிழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்...

Published by:Elakiya J
First published:

Tags: Kodaikanal, Tour, Tourism