• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சைரன் கார்.. தேவஸ்தானத்தில் ஓசி ரூம்.. பழனியில் சிக்கிய போலி ஐஏஎஸ் ஆசாமி

சைரன் கார்.. தேவஸ்தானத்தில் ஓசி ரூம்.. பழனியில் சிக்கிய போலி ஐஏஎஸ் ஆசாமி

போலி ஐஏஎஸ் ஆசாமி கைது

போலி ஐஏஎஸ் ஆசாமி கைது

ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி பழனியில் தங்கும்விடுதியில் ஓசியில் அறை கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இலவச அறைக்கேட்ட போலி ஐஏஎஸ் ஆசாமியை பிடித்து ஊழியர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    நாகப்பட்டினத்தை  சேர்ந்தவர் குமார். பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்த குமார், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தங்கும் விடுதியில் இலவசமாக தங்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையை கேட்டுள்ளார். மேலும் பழனியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டுள்ளார்.

    அப்போது முன்னுக்குப் பின் முரணாக குமார் பதில் அளித்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த குமார் காரை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள் குமாரை பிடித்து வந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறையில் வசித்துரும்  குமார் காரில் சைரன் , தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம் வந்ததும். பல இடங்களில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி கூறிக்கொண்டு  சலுகைகளை பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.

    கடைசியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற குமார் ஐஏஎஸ் அதிகாரிகளை கூறிக்கொண்டு சிறப்பு தரிசனம் செய்து விட்டு வந்ததும் பழனியில் அதேபோன்று ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி சலுகைகளை பெற நினைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குமார் மீது வழக்கு பதிவு செய்த பழனி அடிவாரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பழனிமலை அடிவாரத்தில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - அங்குபாபு  (பழனி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: