• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொடைக்கானல் மலைச்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு - மர்மநபர்களை தேடும் போலீஸ்

கொடைக்கானல் மலைச்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு - மர்மநபர்களை தேடும் போலீஸ்

கொடைக்கானல் மரனம்

கொடைக்கானல் மரனம்

கொடைக்கானல் மலைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே அப்பகுதி பெண்கள் விறகு எடுப்பதற்காக சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒருவர் சடலமாக புதர்களின் நடுவே  கிடந்துள்ளார் இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியோடு கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவல் துறையினரால் மீட்கப்பட்டது.சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் திண்டுக்கலில் இருந்து  ரூபி என்ற மோப்ப நாயினை  வரவழைத்தனர். மோப்ப நாய்  சம்பவ  இடத்திற்கு அருகில் இருந்து சிறிது தூரம் ஓடி  நின்றது இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

Also Read:  கடம்பூர் மலைக்கோயிலில் போதை இளைஞர்கள் வேல் கம்புகளை பிடுங்கி அட்டகாசம் - வீடியோ வைரலானதால் நடவடிக்கை

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட  அடையாளம் தெரியாத இறந்த நபரின் வயது சுமார் 35 வயது மதிக்கதக்கது என்றும்,உடல் முழுவதும் காயங்கள் இருந்ததும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நபரை அடித்து கொலை செய்து வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில்  சாலையின் ஓரத்தில் மர்மநபர்கள் வீசி சென்றுள்ளனரா  என்ற கோணத்தில் காவல் துறையினர் பிரதான மலைச்சாலையில் உள்ள சோதனை சாவடி மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவ ருகின்றனர்.

இச்சம்பவத்தால் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவம் அரங்கேறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: