முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கைவிட்ட காதல் கணவன்.. கண்ணீருடன் இளம்பெண் - எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

கைவிட்ட காதல் கணவன்.. கண்ணீருடன் இளம்பெண் - எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

திண்டுக்கல் காதல் விவகாரம்

திண்டுக்கல் காதல் விவகாரம்

கணவரை சேர்த்து வைக்க கோரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை இல்லாததால் இளம்பெண் எஸ்.பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டுச் சென்ற காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கௌசல்யா. இவருக்கும் திண்டுக்கல் ஐடிஐயில் படிக்கும்போது தன்னுடன் படிக்கும் கண்ணனுரை சேர்ந்த மகுடீஸ்வரன் என்ற இளைஞருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். படிப்பு முடிந்ததும் இருவரும் சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

Also Read: தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் கிடையாது - மின்வாரிய ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

சென்னையில் இருவரும் தங்கி வேலை செய்து வந்து நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் கணவன் மனைவியாக சென்னையில் வாழ்ந்து வந்தனர். சென்னையில் மூன்று மாதம் வசித்து வந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் திண்டுக்கலுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அங்கு இளம்பெண்ணின் அனுமதி இல்லாமல் வயிற்றில் உருவான கருவை கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மகுடீஸ்வரன் மனைவியை பிரிந்து சென்றுள்ளார். கணவர்  வீட்டுக்குச் சென்று கேட்டபோது உங்கள் சமூகத்துக்கும் எங்கள் சமூகத்துக்கும் ஒத்து வராது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

Also Read: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகன்.. புதுக்கோட்டை மக்கள் வியப்பு

இது சம்பந்தமாக ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளரை கண்டித்தும் காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் கௌசல்யா தன் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் எஸ்பி சீனிவாசனிடம்  மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)

First published:

Tags: Crime News, Love, Love breakup, Love issue, Love marriage