திண்டுக்கல் அருகே உள்ள கல்லம்பட்டியில் தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது. சிறு மலைப்பகுதியில் பெய்யக்கூடிய
மழை நீரை தேக்கி வைப்பதற்காக இந்த தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது.
இதனிடையே வாழக்காய்பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் தங்கபாண்டி வயது 21 இவர் மதுரை சட்டக்கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று 16.01.22 தனது ஐந்து நண்பருடன் சேர்ந்து குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தடுப்பணைக்கு சென்றுள்ளார்.
தடுப்பணையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது தங்கப்பாண்டி மற்றும் சிங்கராஜ் ஆகியோர் சேற்றில் சிக்கிக் கொண்டனர். தங்கப்பாண்டியுடன் உடன்வந்த நண்பர்கள் இருவரையும் மீட்க முயன்றனர்.
மேலும் படிக்க: சட்டக் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்? போலீஸார் மீது குற்றச்சாட்டு
இதில் சிங்கராஜை முதலில் மீட்டனர் தங்கப்பாண்டியனை கடும் போராட்டத்திற்கு பின்பு நண்பர்கள் மீட்டனர். ஆனால் அதற்குள் தங்கப்பாண்டியன் தண்ணீரில் மூழ்கினார்.
மீட்கப்பட்ட தங்கப்பாண்டியனை நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்திலேயே கொண்டு சென்றனர். அங்கு தங்கப்பாண்டி பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மட்டும் 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சமூக மோதலில் முடிந்த செல்ஃபி மோகம்..போலீஸ் குவிப்பு இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.