Home /News /tamil-nadu /

கொடைக்கானலை அச்சுறுத்தும் மேஜிக் மஷ்ரூம்.. சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் போதை கும்பல்

கொடைக்கானலை அச்சுறுத்தும் மேஜிக் மஷ்ரூம்.. சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் போதை கும்பல்

கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்ப‌னையில் ஈடுப‌ட்ட‌ ஒருவ‌ர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 • News18 India
 • 2 minute read
 • Last Updated :
  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க  த‌மிழ‌க‌ம் ம‌ட்டுமின்றி கேர‌ளா,ஆந்திரா,கர்நாட‌கா உள்ளிட்ட ப‌ல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து  இருந்து ஏராளமான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை த‌ருகின்றன‌ர் ,தொட‌ர் விடுமுறை ம‌ற்றும் வார‌ விடுமுறை நாட்களில் ஏராளமான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். இந்நிலையில் இங்கு நிலவும் குளிர்,மிதமான வெப்பம்,மழை உள்ளிட்ட காலநிலையை  பெரும்பால‌னோரை ர‌சிக்க‌ வைக்கிற‌து.

  இதனால்  க‌ஞ்சா ம‌ற்றும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்ப‌னையும் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்துவோரின் எண்ணிக்கையும் த‌ற்பொழுது அதிக‌ரித்துள்ள‌து,குறிப்பாக  வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா  பயணிகளை குறிவைத்து சில‌ர் க‌வ‌ர்ச்சிகர‌மான வார்த்தைக‌ளுக்கு  அடிமையாக்கி க‌ஞ்சா, போதை காளான்க‌ளை விற்ப‌னை செய்து வ‌ருகின்ற‌ன‌ர். மேலும்  மேஜிக்  மஷ்ரூம்   தாவிரவியல் பெயர் சைலோசைபி என்றும் இதில்  போதை 8 மணி நேரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  Also Read: கள்ளக்காதலனை கொலை செய்ய நாட்டுத்துப்பாக்கியுடன் காத்திருந்த பெண்.. சிக்கியது எப்படி?

  இந்நிலையில்  கடந்த சில‌ மாத‌ங்க‌ளாக‌ கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம்,செட்டியார் பூங்கா ,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில்  வெளிப்படையாக போதைகாளானை விற்ப‌னை செய்யும் கும்ப‌ல் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோருக்கு  போதைக் காளான் த‌ட்டுப்பாடின்றி கிடைப்பதாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. இந்நிலையில் போதை காளானின் பாதிப்புகள் தெரியாம‌ல் இளைஞ‌ர்க‌ள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழ‌ந்து விடுகின்ற‌னர்.

  இந்த‌ போதை பொருள்க‌ளினால் உட‌லில் ப‌ல்வேறு பாதிப்புக‌ளும் எற்ப‌ட்டு ப‌ல‌ரும்  உயிரிழ‌ந்தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. காவ‌ல்துறை சார்பில் ப‌ல்வேறு நட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌ட்டாலும் போதை பொருள் விற்ப‌னையை தற்போது வரை முற்றிலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை என‌வே போதை காளான் மற்றும் போதை வ‌ஸ்துக்க‌ளை விற்ப‌னை செய்வோரை க‌ண்ட‌றிய‌வும், பொது இட‌ங்க‌ளில் விற்ப‌னையில் ஈடுபடுவோர் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டுமென‌ ப‌ல்வேறுத‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்தனர்.

  Also Read:  சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் கடைகளில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

  இந்நிலையில் கொடைக்கானல் காவல் துறையினர் மலைக்கிராமங்களின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா காளான் விற்பனை செய்பவர்களை பிடிக்க ரகசிய குழுக்கள் அமைத்து சாதார‌ண உடையில் தீவிர‌மாக‌ ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதில் ஒரு பகுதியாக நேற்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ரோந்துப்பணியை மேற்கொண்டபோது மேல்மலை  கிரமமான கவுஞ்சி கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கவுஞ்சி கைகாட்டி அருகே நின்றுகொண்டிருந்த  கற்பகநாதன்(45) என்பவரை  பிடித்து விசாரித்தபோது அவர் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிலோ  எடைகொண்ட போதை  காளான்களை போலீசார் கைப்பற்றினர்.

  மேலும் அவரை  விசாரணை செய்ததில் கஞ்சா மற்றும் போதை காளானை சுற்றுலா பயணிகளை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்றன‌ர், மேலும் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் போதைக்காளான் ம‌ற்றும் க‌ஞ்சா விற்ப‌னை செய்ப‌வ‌ர்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் அவ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌வும் காவ‌ல் துணை க‌ண்காணிப்பாள‌ர் சீனிவாச‌ன் எச்ச‌ரித்துள்ளார்.

   செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News

  அடுத்த செய்தி