முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 50 வயது பெண்ணுடன் குடித்தனம் நடத்திய வாலிபர்.. உறவினர்கள் கட்டிவைத்து கல்லால் அடித்த கொடூரம் - கொடைக்கானலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

50 வயது பெண்ணுடன் குடித்தனம் நடத்திய வாலிபர்.. உறவினர்கள் கட்டிவைத்து கல்லால் அடித்த கொடூரம் - கொடைக்கானலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கொடைக்கானல்

கொடைக்கானல்

Dindugal | வயதான பெண்ணை திரும‌ண‌ம் செய்த இளைஞனை பெண்ணின் தம்பி கல்லால் அடித்த கொடூர காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொடைக்கானல் கூக்கால் வயல் பகுதி அருகே வயதான பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞனை தம்பி உள்ளிட்ட மூவர் கயிற்றால் கட்டியும் கல்லால் அடித்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிரமமான கூக்கால் கிராமத்தில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு உசிலம்பட்டியை சேர்ந்த தன்ராஜ்(32) என்ற இளைஞர் இந்த கிராமத்திற்கு வருகை புரிந்து நிலம் வாங்கி தனியார் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். மேலும் இதே கிராமத்தில் பாலம்மாள்(50) என்பவர் கணவர் இறந்த நிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் இவரது விடுதியில் பணி புரிந்து வந்துள்ளார். அப்போது விடுதி உரிமையாளரான இளைஞனுக்கும், வயதான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவி போல் கடந்த 3 வருடமாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read:  உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவிக்கு கத்திக்குத்து - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இதனையடுத்து வயதான பெண்ணின் உறவினர்கள் பலமுறை அறிவுறுத்தியும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், இதனால் வயதான பெண்ணின் உறவினர்களுக்கும் இளைஞனுக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கூக்கால் வயல் பகுதி அருகே கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்ராஜ் நடந்து வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த வயதான பெண்ணின் தம்பி பூவேந்திரன்மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 நபர்கள் இளைஞனை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கை, கால்களை கயிற்றால் கட்டியும், கல்லால் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மேலும் இதனை பார்த்த வயதான பெண் மற்றும் அப்பகுதி மக்கள்  ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞனை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இந்த இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் இளைஞனை 4 நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கும் விடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வயதான பெண்ணின் தம்பி பூவேந்திரன், வரதராஜன், கார்த்திக், சின்ன தம்பி, உள்ளிட்ட 4 நபர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த 4 நபர்களையும் கொடைக்கானல் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)

First published:

Tags: Crime News, Dindugal, Illegal affair, Illegal relationship, Police, Tamil News