Home /News /tamil-nadu /

கொடைக்கானலில் குப்பை ம‌ற்றும் க‌ட்டட‌க் க‌ழிவுக‌ளால் வ‌ன‌வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம்...

கொடைக்கானலில் குப்பை ம‌ற்றும் க‌ட்டட‌க் க‌ழிவுக‌ளால் வ‌ன‌வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம்...

கொடைக்கானல்

கொடைக்கானல்

Kodaikanal Forest | கொடைக்கான‌ல் பாம்பே சோலா வ‌ன‌ப்ப‌குதியில் கொட்ட‌ப்ப‌டும் குப்பை ம‌ற்றும் க‌ட்டிட‌க் க‌ழிவுக‌ளால் வ‌ன‌வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம்.

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கான‌ல் முக்கிய‌ சுற்றுலா த‌ல‌மாக‌வும் ,  பெரும்பாலான‌  இட‌ங்க‌ள் இய‌ற்கை மாறாம‌ல் அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதியாக‌வும் இருந்து வ‌ருகிற‌து,. இந்நிலையில் நகரின்  முக்கிய‌ பகுதிகளான செண்பகனூர் , பழைய அப்பர் லேக் வியூசாலை , கீழ்பூமி, பாம்பே சோலா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்க‌ளின் அருகே உள்ள‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ளில் குப்பை க‌ழிவுக‌ள் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது.

மேலும் ப‌ல‌ வ‌கையான‌  அரிய‌ வ‌கை சோலை ம‌ர‌ங்க‌ள் அமைந்துள்ள‌ பாம்பே சோலா வனப்பகுதிகளில் கட்டிட கழிவுகள் , இறைச்சி கழிவுகள் , ம‌துபாட்டில்க‌ள்,  பிளாஸ்டிக் உள்ளிட்ட‌ குப்பைகளை கொட்டி வ‌ருவ‌தால், இந்த‌ சோலைப்ப‌குதியில் உள்ள‌ வன விலங்குகளான‌ காட்டெருமை , மான் , குர‌ங்கு உள்ளிட்ட‌ வன‌ வில‌ங்குக‌ள் பெரிதும் பாதிப்படைந்து  வ‌ருவ‌துட‌ன் வனப்பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் வன வளமும், நீர் செல்லும் வ‌ழித்த‌ட‌ங்க‌ளும்     பாதிக்க‌ப்ப‌டுவ‌துட‌ன்,  துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Read More : டீ குடிக்க சென்ற கேப்பில் போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ ஷூட் நடத்திய கைதியின் உறவினர்.. 2 போலீசார் பணியிடை நீக்கம்!!


எனவே  வனப் பகுதிகளில் கட்டிட கழிவுகள் ம‌ற்றும்  குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது அப‌ராத‌ம் விதிக்க‌வும் துரித‌மாக‌ நடவடிக்கை எடுக்க வ‌ன‌த்துறையின‌ர் முன்வ‌ர‌வேண்டும் என ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Dindigul, Forest, Kodaikanal

அடுத்த செய்தி