குணா குகை.. பிரையண்ட் பூங்கா.. நட்சத்திர ஏரி - கொடைக்கானலில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்
குணா குகை.. பிரையண்ட் பூங்கா.. நட்சத்திர ஏரி - கொடைக்கானலில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்
கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்ததுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான வெப்பம் நிலவுவதால் இந்த சீதோஷண சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல்
நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ஜாபர்சாதிக் (கொடைக்கானல் )
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.