கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் உள்ள தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்,நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது,மேலும் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தாலும் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று அங்கு அடுக்கு அடுக்குகளாக உள்ள விவசாய நிலங்களையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி பூம்பாறை ஆணை வட்டம் மற்றும் கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் நபர் ஒருவருக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை கூட்டமாக தனியார் நீர்வீழ்ச்சிகளில் அனுமதிப்பது கொரோனா தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் உள்ள தனியார் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 35 சதவிகித முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.