• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Kodaikanal: கொடைக்கானல் செல்ல விருப்பமா? லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க..!

Kodaikanal: கொடைக்கானல் செல்ல விருப்பமா? லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க..!

கொடைக்கானல்

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று கடந்த சில தினங்களாக வர தொடங்கியுள்ளனர். 

  • Share this:
    சுற்றுலா பயணிகள் வருகையால் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மலைகளின் இளவரசியான கொடைக்கானல்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு ஒரு  சில தளர்வுகளை  அறிவித்துள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று கடந்த சில தினங்களாக வர தொடங்கியுள்ளனர்.  முக்கிய சுற்றுலா தலங்கள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மேல்மலை கிராம பகுதிகளான  கூக்கால் ஏரி, மன்னவனூர் ஏரி  உள்ளிட்ட ஏரிகளையும், பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானல்  நட்சத்திர ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரியை  சுற்றுலா பயணிகள்  மேற்கொண்டு வருகின்றனர்.

    Also Read:   சுனில் கவாஸ்கரின் உலக சாதனையை முறியடித்த சச்சினுக்கு தங்க கைக்கடிகாரம் பரிசு - சுவாரஸ்ய நினைவலைகள்!

    சுற்றுலா பயணிகள்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொடைக்கானல் மலை பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் இதமான சீதோஷண சூழ்நிலையை  அனுபவித்தவாறும்   மேக கூட்டங்களிடையே புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா தொழில்புரிவோர் சற்று மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    இதனிடையே தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள  பிரையண்ட் பூங்கா,ரோஜா பூங்கா,செட்டியார் பூங்காக்கள்  நாளை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு  அனுமதிக்கப்படுவதாகவும்,  மேலும் அரசு வழிகாட்டுதலின் படி 50 சதவிகித பயணிகள் மட்டும்  அனுமதிக்கபடுவார்கள்  என  தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார், பூங்காக்களுக்கு வரும் பயணிகளுக்கு  கட்டாயமாக உடல் வெப்பமானி பரிசோதனை செய்த பின் பூங்காக்களில்  அனுமதிக்கப்படுவார்கள்  எனவும் பூங்காக்களுக்கு வரும் பயணிகள் அனைவரும்  கட்டாயமாக முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.முதல் கட்டமாக பூங்காக்கள் நாளை முதல்(திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கான‌ல் செய்தியாள‌ர் ஜாப‌ர்சாதிக்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: