வார விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் தற்போது நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர். வார விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
நட்சத்திர ஏரி, பிரயண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செய்வதறியாது திகைத்தனர். ஒருசில இடங்களில் வாகன ஓட்டிகளே போக்குவரத்தை சீரமைத்தனர்.
-செய்தியாளர்: ஜாபர் சாதிக்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.