கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலை பூண்டு அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள மலைக்கிராம விவசாயிகள் போதிய விலை கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி, பூண்டி, கிளாவரை, மன்னவனூர்,கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் பல ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற மலைகளில் விளையும் பூண்டுகளை விட கொடைக்கானல் மலைப்பூண்டு அதிகம் மருத்துவதன்மை கொண்டது.
பாரம்பரியமாக மலைவாழ் விவசாயிகள் நூற்றாண்டுகளுக்கு மேலாக மருத்துவகுணமிக்க மலைப்பூண்டுவிவசாயம் செய்துவருவதால் இதை அங்கீகரிக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டது .மலைப்பூண்டு பயிரிட்ட 120 நாட்களில் அறுவடைசெய்துவிடலாம். கொடைக்கானல் மலை பகுதியில் மேட்டுப்பாளையம் பூண்டு ரகம் விளைவிக்கப்பட்டு தற்போது அறுவடை பணியில் மலை கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர்மழையால் மலை பூண்டு விளைச்சல் மிக குறைவாக இருப்பதாகவும் வெளிமாவட்ட பூண்டுகள் வரத்து அதிகரிப்பால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த வருடம் ஒரு கிலோ மலை பூண்டு 250ரூபாய் முதல் 300 ரூபாய் விற்று வந்த நிலையில் இந்த வருடம் ஒரு கிலோ பூண்டு 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாவதால் மலை கிராம விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் இதனை வேளாண்மை துறை கவனம் செலுத்தி நஷ்டம் அடைந்துள்ள மலை பூண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : ஜாபர்சாதிக் (கொடைக்கானல்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.