பெட்ரோலில் தண்ணீர் கலப்படமா? பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! நடந்தது என்ன?

கொடைக்கானல்

பெட்ரோல் பங்க் மேலாளர் பெட்ரோலில் தண்ணீர் கலந்துள்ளதா என  சோதித்து பார்க்கும் போது  பெட்ரோலில்  தண்ணீர் கலக்கவில்லை என தெரிவித்தார்.

 • Share this:
   கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக  கடும் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது,இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை மெக்கானிக்கான குமார்  என்பவர்  5 லிட்டர்  கேனில் பெட்ரோல் வாங்கி சென்று உள்ளார். அதன் பின் சாண்ட்ரோ காரில் பெட்ரோல் ஊற்றி வாகனத்தை இயக்க முற்பட்டுள்ளார். அப்போது வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை என கூறப்படுகிறது.

  இந்நிலையில் மெக்கானிக் குமார் அந்த காரில் இருந்த பெட்ரோலை எடுத்து  சோதனை செய்து பார்த்த போது  தண்ணீர் கலந்து இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து  பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  Also Read:  ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

  மேலும் நேற்று  ஒருவர் இதே போன்று தனது இருசக்கரவாகனத்தில் பெட்ரோல் நிரப்பி உள்ளார் இதில் தண்ணீர் கலந்து உள்ளது என கூறி  இரண்டு வாடிக்கையாளர்களும்  சேர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் மேலாளர் பெட்ரோலில் தண்ணீர் கலந்துள்ளதா என  சோதித்து பார்க்கும் போது  பெட்ரோலில்  தண்ணீர் கலக்கவில்லை என தெரிவித்தார்.

  கொடைக்கானல்


  இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கி சென்ற பெட்ரோலின் நிறமும், பங்கில் இருந்து ஒரு வாலியில் ஊற்றப்பட்ட பெட்ரோலின் நிறமும் மாறுபட்டுள்ளதாக கூறி மீண்டும் வாடிக்கையாளர்கள் இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொடைக்கானலில்  உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலின் அளவு மற்றும் தண்ணீர் கலப்பது உள்ளிட்ட குற்றசாட்டுகள்  அடிக்கடி நடைபெறுவதால்  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாள‌ர் ஜாபர்சாதிக், கொடைக்கான‌ல் 
  Published by:Arun
  First published: