முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஜாக்பாட் செய்தி சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஜாக்பாட் செய்தி சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி

, திருமண உதவி திட்டத்தையே இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் தான் முதல் முறையாக கொண்டு வந்தார் என்றார் அமைச்சர்.

  • Last Updated :

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவியான 8 கிராம் தங்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி. இந்ந நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் பேசுகையில, திருமண உதவி திட்டத்தையே இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் தான் முதல் முறையாக கொண்டு வந்தார்.

Also Read : ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது என்று முதல்வருக்கு உத்தரவிட முடியாது -உயர் நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து சுய உதவி குழுக்கள் அந்த திட்டத்தை பெண்களும் தங்களது குடும்பத்தை அரசு பணிக்கு சென்றால் மட்டும் பத்தாது அரசுப் பணிக்குச் செல்லாத பெண்கள் எல்லாம் தனது சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு யாரையும் எதிர்பாராமல் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டு.ம் அவர்கள் வாழ்வு உயர வேண்டும் என்பதற்காக இந்த சுய உதவி குழு திட்டத்தை தர்மபுரியில்  நம்முடைய முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பெண்களுக்கு அவர்கள் என்ன தொழில் செய்ய  விரும்பினாலும் கடன் வழங்குவதற்கு உரிய  ஆணைகளை பெற்று சமூகத்தில் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு கூட்டுறவு இயக்கம் மற்றும் கூட்டுறவு துறை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Also Read : தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்

இந்த விழாவில் 100 பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் 72 பயனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் பட்டா மாற்றுதல் இலவச வீட்டு மனை பட்டா திருமண உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Dindigul, DMK