கள்ளக்காதலியின் வீடு அருகே சடலமாக கிடந்த இளைஞர்- தூக்கில் தொங்கிய பெண் - விசாரிக்கும் காவல்துறை

போலீஸ் விசாரணை

காகித ஆலையில் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  பழனியருகே பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும், இளைஞர்‌ ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் பழனி அருகே சின்னகளயம்புதுர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் விக்டோரியா(41). இவருக்கு திருமணமாகி  கணவரும் திருமண வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். விக்டோரியா எனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து பலஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை  விக்டோரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் விக்டோரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  Also Read:  கடன் தொல்லை - மனைவி, குழந்தைகளுடன் விவசாயி தற்கொலை

  இந்நிலையில் விக்டோரியாவின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மநாபன்(31) என்ற இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. கொலையான  பத்மநாபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார்.

  போலீசாரின் தொடர் விசாரணையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் விக்டோரியாவும், பாப்பம்பட்டியை சேர்ந்த பங்குத்மநாபனும் மடத்துக்குளம் அருகே உள்ள காகித ஆலையில் ஒன்றாக வேலை பார்த்தது தெரியவந்தது. இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. பத்மநாபன் அடிக்கடி விக்டோரியா  வீட்டிற்கு வந்துபோவதுமாக இருந்துள்ளார்.

  Also Read: வாளுடன் வாட்ஸ் அப் வீடியோ: வாலிபர் கைது

  இந்நிலையில் விக்டோரியா தூக்கிட்டும், பத்மநாபன் கத்தியால் குத்தப்பட்டும் உயிரிழந்திருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் : அங்குபாபு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: