பழனி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்!

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்.

திடீரென அன்பழகன் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

  • Share this:
பழனி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான அன்பழகன் (65) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் திடீரென அன்பழகன் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

பழனியில் எல்ஐசியில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வந்த அன்பழகன், கடந்த 2006ம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, 2006 முதல் 2011வரை திமுக ஆட்சி காலத்தில்  பழனி தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

செய்தியாளர் - அங்குபாபு
Published by:Esakki Raja
First published: