Home /News /tamil-nadu /

மக்காச்சோளத் தட்டைக்குள் விவசாயி குடும்பத்துடன் தீயில் கருகி உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனையில் ’திடுக்’ தகவல்

பழனி அருகே விவசாயி, தனது மனைவி, மகன், மகளுடன் மக்காச்சோளத் தட்டைப் போரில் தீப்பற்றிய நிலையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற முருகேசன் (52). இவருக்கு வளர்மதி (45) என்கிற மனைவியும் சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் உள்ளனர்.

    மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வருகின்றனர். சின்னராசுவிற்கு 5 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் உள்ளது

    இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பழனி தீயணைப்பு படையினருக்கு மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது.

    Also read: நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்பே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

    இதனையடுத்து தீயை அணைப்பதற்காக வத்த கவுண்டன் வலசு கிராமத்திற்கு சென்ற பழனி தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயன்றபோது மக்காச் சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில், நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல் என்று தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9மணியளவில் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, சம்பவம் தொடர்பாக சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஆயக்குடி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் முத்துக்குமார் மற்றும் சித்திக் ஆகியோர் மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில் இறந்த நான்கு பேருமே ஏற்கனவே விஷமருந்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    கடன் பிரச்சினை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இந்த தற்கொலை சம்பவம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி ஒருவர் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடன் பிரச்சினை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இந்த தற்கொலை சம்பவம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - சங்கர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dead, Dindugal, Family, Palani

    அடுத்த செய்தி