முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மனைவியின் முன்னாள் காதலனை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் முன்னாள் காதலனை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட வன்மத்தால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட வன்மத்தால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட வன்மத்தால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

  • Last Updated :

திண்டுக்கல்லில் மனைவியின் முன்னாள் காதலனை நண்பர்களின் உதவியோடு பேக்கரியில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவன் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன் பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை(வயது 34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாவும் பிறகு அந்தப் பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாமி துறையின் காதலியை மருது என்ற நபர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் சாமி துறைக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

Also Read:  மனைவியின் ஆவி.. நள்ளிரவில் சுடுகாட்டில் கதறல் - இளைஞர் தற்கொலையால் கிராம மக்கள் அதிர்ச்சி

இந்நிலையில் சாமி துறைக்கும் மருது என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது ஒரே தெருவில் வசித்து வந்ததால் இந்த பிரச்சனை அடிக்கடி நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு மேலாகவே மலையப்பன்பட்டி கிராமப்பகுதியில் அடிக்கடி இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் இரு தரப்புமே ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் மருது மற்றும் சாமிதுரை அவர்களுக்கு இடையேயான குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் அடிப்படையில்  விசாரனைக்கு இரு தரப்பையும் அழைத்து வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மருது மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து சாமி துறையை வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பேக்கரிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

Also Read: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனை தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி கைது

அப்போது பேக்கரியின் உள்ளே அமர்ந்திருந்த சாமி துறையை கண்ணிமைக்கும் நேரத்தில் மருது மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சாமிதுரை உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி போட முயற்சித்து ரத்த வெள்ளத்தில் பேக்கரிக்கு வெளியிலேயே மயங்கி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வத்தலகுண்டு காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன்  நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் வத்தலகுண்டு காவல்துறையினர் தரப்பில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களான மருது மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரையும் வத்தலகுண்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.பட்டப்பகலில் துணிகரம் ஆக பேக்கரியில் அமர்ந்திருந்த ஒரு நபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வத்தலக்குண்டு நகர் பகுதியில் பெரும் அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட வன்மத்தால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

First published:

Tags: Crime News, Death, Dindugal, Murder, Police