திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளான, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, கூக்கால், குண்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உருளை கிழங்கு விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர், இங்கு விளைவிக்கப்படும் உருளை கிழங்கு கொடைரோடு,
மதுரை,
கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது, மேலும் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, என வெளி மாநில சந்தையில் கொடைக்கானல் கிழங்கிற்கு சுவை அதிகம் என்பதால் மவுசு அதிகரித்து காணப்படும்
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும்,பருவ நிலை மாற்றத்தினாலும் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உருளைகிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது, விளைச்சல் குறைந்துள்ளதால் கிலோ ஒன்றிற்கு 30 முதல் 40 வரை விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக வருத்தம் தெரிவிக்கும் விவசாயிகள்
குஜராத், ஆக்ரா, ஹாசன், இந்தூர், போன்ற வெளிமாநில பகுதிகளில் இருந்து உருளை கிழங்கு வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் உருளை கிழங்கு கிலோ ஒன்றிற்கு 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதால் வேலையாட்களின் சம்பளம், பராமரிப்பு, சாகுபடி செலவு மற்றும் முதலீட்டு பணத்தை கூட எடுக்கமுடியாமல் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர், மேலும் வில்பட்டி மலைக்கிராமத்தில் கிழங்கு குளிர்பதன கிட்டங்கி அமைத்து தரவும் மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.