முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 3 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த போதை ஆசாமி.. இறந்ததாக நினைத்தவேளையில் உயிருடன் வந்த அதிசயம்

3 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த போதை ஆசாமி.. இறந்ததாக நினைத்தவேளையில் உயிருடன் வந்த அதிசயம்

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கலில் இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் பாலத்தடியில் இருந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Last Updated :

திண்டுக்கல் அருகே  பாலத்தின் அடியில் தண்ணீரில் மூன்று மணி நேரமாக மிதந்த உடல். காவல்துறையினர்   மீட்க முயற்சித்த போது உயிருடன் எழுந்து வந்த அதிசயம்.

திண்டுக்கல் மாவட்டம் அலக்குவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று லாக்டவுன் என்பதால் வேலைக்கு செல்லவில்லை காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல் திருச்சி புறவழிச்சாலையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்த  மதுவை வாங்கி அதிகமாக குடித்துள்ளார்.  போதை தலைக்கு  ஏறவே அவரால்  நடக்க முடியவில்லை. இதனையடுத்து சாலையின் ஓரத்தில்  இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்துள்ளார்.

போதையில் தடுமாறி ஓடையில் விழுந்துள்ளார். ஓடையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால்   பாலத்தின் நடுவே சென்று விட்டார். மது போதை அதிகமானதால் சுயநினைவை இழந்த முருகவேல் சுமார் மூன்று மணி நேரமாக தண்ணீரில் மிதந்து உள்ளார். உடலில் எவ்வித அசைவும் இல்லை. அவ்வழியாக வந்த நபர் ஓடை பாலத்தின் அடியில் மனித உடல் கிடப்பதாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில்   உடலை மீட்க முயற்சித்துக் கொண்டிருந்த போது போதை சற்று தெளிந்த முருகவேல் சத்தம் போட்டுள்ளார். மேலும் தட்டுத்தடுமாறி பாலத்தின் அடியில் இருந்து மெதுவாக வெளியே வந்து தலையை நீட்டினார். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். அவரால் தொடர்ந்து எதுவும் பேசமுடியாத நிலையில் போதையின் உச்சியில் இருந்த முருகவேல் தரையில் படுத்துவிட்டார். இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் பாலத்தடியில் இருந்து வந்த சம்பவம்  அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவரிடம் காவல்துறையினரால் விசாரணை நடத்த முடியவில்லை இதனிடையே அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டையை எடுத்து காவல்துறையினர் பார்த்த பொழுதுதான் அவர் தாடிக்கொம்பு அருகே உள்ள அலக்குவார் பட்டியை சேர்ந்த முருகவேல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் மேலும்  சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)

First published:

Tags: Dindigul, Police, Tasmac