Home /News /tamil-nadu /

27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு 2 அமாவாசைகள் சொல்றாங்க - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு 2 அமாவாசைகள் சொல்றாங்க - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanithi Stalin: 27 அமாவாசை முடிந்தவுடன் ஆட்சி முடிந்துவிடும் என்று  இரண்டு அமாவாசைகள் கூறுகிறார்கள் அமாவாசைகள் யார்  என்று மக்களுக்கு தெரியும் - உதயநிதி ஸ்டாலின்

  சட்டசபையை முடக்கி விட்டு தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது என திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

  திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்  வேனில் இருந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில்,  “தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது.  போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் முதலாவது அலையின் போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

  கொரோனா அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி எட்டு மாதத்தில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இது  தி.மு.க அரசின் சாதனை ஆகும் இதன் காரணமாக மூன்றாவது அலையில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்தியாவிலேயே கோவிட் வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் நமது முதல்வர் மட்டுமே தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசு கஜானா காலி செய்யப்பட்டு 5 லட்சம் கோடி கடனில் இருந்தது.

  Also Read:  கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்டத்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்

  தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என தலைவர் கூறினார். அவர் கூறியது போல் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு தவணையாக ரூ 4,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. தலைவர் சொன்னது போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக வழங்குவார். திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெறுகிற முதல் மாநகராட்சி தேர்தல். மாநகராட்சியாக அறிவித்திருந்தாலும் தற்பொழுது திண்டுக்கல் பெரிய கிராமம் ஆகவே காட்சி அளித்து வருகிறது .10 ஆண்டு கால ஆட்சியில் திண்டுக்கல் கவனிப்பாரின்றி இருந்தது.

  ‘பச்சைப் பொய் பழனிச்சாமி’ தமிழக சட்டமன்றத்தை முடக்க போகிறார்கள் என கூறி வருகிறார். அவ்வாறு முடக்கினால் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள். முடக்கி விட்டு தேர்தலை வைத்து பாருங்கள் அதில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க வெற்றி பெறாது. 27அமாவாசை முடிந்தவுடன் ஆட்சி முடிந்துவிடும் என்று  இரண்டு அமாவாசைகள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே தெரியும் இரண்டு அமாவாசைகள் யாரென்று. இவர்களுக்கு எல்லாம் நமது ஆட்சியைப் பற்றி பேச தலைவரைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

  Also Read: வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுக்கிறார்களா? கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

  கடந்த ஒருவாரமாக உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறார்.கடந்த வாரம் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது எனக்கு எதிரே தான் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தார். டேபிளுக்கு மேலே பார்த்தால் நான் தெரிவேன் டேபிளுக்கு கீழே பார்த்தால் நான் தெரிய மாட்டேன். தி.மு.க மக்களை சந்தித்து மக்களின் நம்பிக்கை பெற்று மக்களின் செல்வாக்கைப் பெற்று அமைந்திருக்கின்ற மக்களாட்சி இது கூவத்தூரில் டேபிளுக்கு கீழே தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. தற்பொழுது நடைபெற்று வருவது  மக்கள் ஆட்சியாகும். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி  மோடியை பார்த்து  தமிழகத்தில் தி.மு.க இருக்கும் வரை உங்களால் அங்கு காலூன்ற முடியாது என சவால் விட்டுள்ளார்” என பேசினார்.

  செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, DMK, Edappadi palanisamy, Election, Local Body Election 2022, MK Stalin, Politics, Udhayanidhi Stalin

  அடுத்த செய்தி