• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஏ.டி.எம். மையத்துக்கு வருவோரிடம் நூதன கொள்ளை: ‘பலோ’ கொள்ளையன் கைது!

ஏ.டி.எம். மையத்துக்கு வருவோரிடம் நூதன கொள்ளை: ‘பலோ’ கொள்ளையன் கைது!

நூதன கொள்ளை

நூதன கொள்ளை

ஆபேல்பாலா என்பவர் ஏடிஎம் முன்பாக சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததால் அவரை பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில்  ஓமன்ந்தை ஏமாற்றியது அவர்தான் என்பதும் வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இதேபோல் பணம் எடுக்க தெரியாமல் வருபவர்களிடம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிப்பதே அவர் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.

  • Share this:
    திண்டுக்கலில் ஏடிஎம்க்கு வரும் அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடித்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த 50 வயதான மருதாயி என்பவர் தனது கணவர் ஓமன்ந்திடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துவர அனுப்பியுள்ளார்.  ஓமன்ந்துக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கே நின்றிருந்த ஒருவரிடம் உதவி கேட்டபோது அவர் தான் கேட்ட பணம் ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு ஏடிஎம் கார்டை திரும்ப கொடுக்கும்பொழுது போலியான கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை அறியாத ஒமன்ந்த் அந்தக் கார்டை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.  அந்த கார்ட் மூலம் மீண்டும் பணம் எடுக்க அவர் முயன்றபோது கார்டு செயல்படவில்லை என்பது தெரியவந்தது.  இது தொடர்பாக வங்கியில் சென்று விசாரித்த போது, ’இது அவரது கார்டு இல்லை என்றும் அவரது  கார்டின் மூலம் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் 65 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: 'பெட்ரோலும் வேண்டாம், கரண்டும் வேண்டாம்' - மதுரை இளைஞர் உருவாக்கிய சோலார் சைக்கிள்!


    அதிர்ச்சியடைந்த ஓமன்ந்த் இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  கொள்ளையனை பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து டிஎஸ்பி மகேஷ்  உத்தரவிட்டார்.தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் திண்டுக்கல் அருகே உள்ள புகையிலை பட்டியை சேர்ந்த ஆபேல்பாலா என்பவர் ஏடிஎம் முன்பாக சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததால் அவரை பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில்  ஓமன்ந்தை ஏமாற்றியது அவர்தான் என்பதும் வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இதேபோல் பணம் எடுக்க தெரியாமல் வருபவர்களிடம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிப்பதே அவர் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.

    மேலும் படிக்க: குடும்பத் தகராறில் விபரீத முடிவு எடுத்த பெண்...

    இதனையடுத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் நான்கு போலி ஏடிஎம் கார்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செய்தியாளர்: சங்கர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: