Home /News /tamil-nadu /

மார்டன் டிரெஸ் சாமியார், சிபிஐ அதிகாரி.. பல வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

மார்டன் டிரெஸ் சாமியார், சிபிஐ அதிகாரி.. பல வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

பபிதா

பபிதா

 பபிதா, கடந்த ஓராண்டுக்கு முன்பு தன்னை சிபிஐ அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ஞானதேவ பாரதியிடம் அறிமுகமாகியுள்ளார்.  அவரின் நம்பிக்கையை பெற்ற பின்னர், 60 சவரன் நகை, பணம் என பல லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளார் பபிதா.

    திண்டுக்கல்லில், ஆசிரமம் நடத்த நிலம் தருவதாகக் கூறி சந்நியாசி ஒருவரை பெண் சாமியார் பபிதா என்பவர் ஏமாற்றியுள்ளார். சிபிஐ அதிகாரி  என கூறிக்கொண்டு சொத்துக்களையும் அபகரிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் தவயோகி ஞானதேவ பாரதி. இவர் தனது சொத்துக்களை விற்று அங்கு ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார்; முதியோர் இல்லமும் வைத்துள்ளார்.  திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்தவர் பபிதா என்ற பவித்ரா.

    இவர் தன்னை காளியின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு மாடர்ன் பெண் சாமியாராக வலம் வந்தார்.பிரபல அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் நிகழ்ச்சிகளி்ல பங்கேற்பது போன்ற வீடியோக்கள் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில்,  பபிதா, கடந்த ஓராண்டுக்கு முன்பு தன்னை சிபிஐ அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ஞானதேவ பாரதியிடம் அறிமுகமாகியுள்ளார். அப்போது ஞானதேவ பாரதியின் ஆசிரமத்தில் சில பொருட்கள் திருடுபோய் விட்டன. அவற்றைத் தான் கண்டுபிடித்து தருவதாக அவர் கூறி நம்பிக்கையை உருவாக்கினார்.

    இதையும் படிங்க: நாட்டிற்கே வழிகாட்டி என்று கூறுகிறார் ஸ்டாலின்.. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட தரமாக இல்லை - எடப்பாடி பழனிசாமி


    ஆனால் போலீசார் நட வடிக்கையால் திருடன் பிடிக்கப்பட்டு பொருட்களும் மீட்கப்பட்டன, அதேநேரம் பபிதாவால் தான் இது நடந்தது என ஞானதேவபாரதியும் நம்பி விட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியில் தனக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும் அதில் ஆசிரமம் தொடங்கலாம் எனவும் ஆசை காட்டியுள்ளார் பபிதா

    அதேபோல், கொடைக்கானலில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ருத்ராட்ச மரங்கள் இருப்பதாகவும் அங்கு தவம் செய்யலாம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார் பபிதா. இவற்றை நம்பிய ஞானதேவ பாரதியிடம் இருந்து 60 சவரன் நகை, பணம் என பல லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளார் பபிதா. தான் ஏமாற்றப்படுவதை அறிந்த ஞானதேவ பாரதி இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.  இந்த வழக்கில் தற்போது பபிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும்  படிக்க: கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமை.. குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாக வீடியோ வெளியிட்ட பெண்


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Dindugal

    அடுத்த செய்தி