• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘சென்னை கமிஷனர் நானு’-பந்தா காட்டிய போலி போலீஸை மடக்கிய நிஜ போலீஸ்!

‘சென்னை கமிஷனர் நானு’-பந்தா காட்டிய போலி போலீஸை மடக்கிய நிஜ போலீஸ்!

விஜயன்

விஜயன்

காரில் வந்த விஜயனிடம் போலீசார் விசாரித்த போது தன்னை சென்னை கமிஷனர் என்று கூறியுள்ளார். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, போலிஸ் என பொய் கூறியது தெரியவந்தது.

  • Share this:
    வத்தலக்குண்டு அருகே  சைரன் வைத்த காரில் வந்த போலி போலீஸ் கமிஷனரை கைத்துப்பாக்கியுடன்  போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேனி - திண்டுக்கல்  பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை தேனியில் இருந்து சென்னை நொக்கி சைரன், போலீஸ் பெயர் பலகையுடன் பொலிரோ கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.   திண்டுக்கல் சாலை லட்சுமிபுரம் டோல்கேட் அருகே, பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த போலீஸ் பெயர் பலகையுடன் வந்த பொலிரோ காரை  பட்டிவீரன்பட்டி போலீசார்  நிறுத்தி சோதனையிட்டனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    அப்போது காரின் உள்ளே இருந்த சென்னை கொளத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த விஜயன், தன்னை சென்னை போலீஸ் கமிஷனர் என்று கூறியுள்ளார். உதவி ஆணையர் என்ற அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். மேலும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விஜயனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதையும் படிங்க: முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்!




    விசாரணையில் அவர் போலிஸ் கமிஷனர் என பொய் கூறியது தெரியவந்தது. இதையடுத்து, அவர் வந்த காரையும் அவரது அடையாள அட்டையையும் விஜயன் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில்  வைத்து   திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் உட்பட காவல்துறையினர் விஜயனிடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்- சங்கர்- திண்டுக்கல்

    மேலும் படிக்க: பிரான்சில் இருந்து திரும்பிய இருவர் உட்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: