Home /News /tamil-nadu /

மகனுக்கு சொந்தமான நிலம்.. இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கணவர் சதி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

மகனுக்கு சொந்தமான நிலம்.. இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கணவர் சதி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

தீக்குளிக்க முயன்ற பெண்

தீக்குளிக்க முயன்ற பெண்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    80 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து மகனை அடித்து காயப்படுத்திய கணவரை கைது செய்யக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு. 

    மதுரை கரிமேடு பகுதியில் வசித்து வருபவர் வனிதா இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி இவர்களுக்கு சாணக்கியன் நிவேதா என்ற குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு சரளா என்ற இரண்டாவது மனைவியும் உள்ளது ‌. இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வனிதாவின் மாமியார் பாக்கியம் முதல் மனைவி வனிதாவின் மகன் சாணக்கியனுக்கு நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் உள்ள 80 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார்.

    அந்த நிலத்தை கிருஷ்ணமூர்த்தி அவரது இரண்டாவது மனைவியின் மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு கடந்த 22ஆம் தேதி முதல் மனைவி வனிதாவின் மகன் சாணக்கியனை அடித்து காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சாணக்கியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனிதா  அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தனது மகனை அடித்த கணவர் கிருஷ்ணமூர்த்தி அவரது இரண்டாவது மனைவி சரளா மற்றும் இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி புகார் மனு அளித்துள்ளார்.

    புகார் மனு அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.  இதனையடுத்து வனிதா தனது மகள் நிவேதா உடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வனிதாவை தடுத்து மண்ணெண்ணெய் கேனை  அப்புறப்படுத்தினர்.

    அப்போது அலுவலகத்திற்கு  வந்த மாவட்ட ஆட்சியர் விசாகன் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணை நேரில் சென்று விசாரணை செய்தார். உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசியில் போன் செய்து இவர்களின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருடைய கணவர் மற்றும் இரண்டு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dindugal, Police, Suicide attempt

    அடுத்த செய்தி