திண்டுக்கல் : பிரபல பிரியாணி கடைக்கு அபராதம்... சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை

பிரியாணி கடை

திண்டுக்கல் தெற்குரத வீதியில் உள்ள பிரபலமான வேணு பிரியாணி கடையில் பொதுமக்களை கடையில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

  • Share this:
திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி பிரபல ஹோட்டலில் உணவு சாப்பிட பொதுமக்களை அனுமதித்தற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அலை 2-வது தாக்கம் வேகமெடுத்ததால் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவின் தாக்கம் நாளுக்கு குறைந்த வந்த நிலையில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 7,000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இதனால் கொரோனா தாக்கம் உள்ள மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வில் ஹோட்டல்களில் பொதுமக்கள் உணவுகளை பார்சல்  வாங்கிச் செல்ல மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் தெற்குரத வீதியில் உள்ள பிரபலமான வேணு பிரியாணி கடையில் பொதுமக்களை கடையில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா சோதனை செய்தனர்.

Also Read : தமிழகத்தில் 21 மாவட்டங்களில்  100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

இதை தொடர்ந்து  முதல் முறை என்பதால் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.5000 அபராதம் விதித்தார். மேற்கொண்டு இதுபோல் தொடர்ந்து நடைபெற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: