Home /News /tamil-nadu /

திண்டுக்கல் சிறுமி மர்ம மரணம்.. 4-வது நாளாக தொடரும் விசாரணை - மலைக்கிராமத்தில் போலீஸ் குவிப்பு

திண்டுக்கல் சிறுமி மர்ம மரணம்.. 4-வது நாளாக தொடரும் விசாரணை - மலைக்கிராமத்தில் போலீஸ் குவிப்பு

சிறுமி வழக்கு

சிறுமி வழக்கு

பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் ம‌ர்ம‌மான‌ முறையில் உட‌ல் க‌ருகி சிறுமி உயிரிழ‌ந்த‌த‌தை தொட‌ர்ந்து 4 வ‌து நாளாக‌ தொட‌ரும் போலீஸ் விசார‌ணை, மலைக்கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி, தாண்டிக்குடி அருகேயுள்ள மலைகிராமமான பாச்சலூரை சேர்ந்த விவசாயி சத்யராஜ் மகள் பிரித்திகா(9). இவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புத‌ன் கிழ‌மை காலை பள்ளி இடைவெளியில் மாணவியை காணவில்லை. இதையடுத்து பிரித்திகா உடல் எரிந்தநிலையில் ப‌ள்ளி வ‌ளாக‌த்திலேயே மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

  மாணவியின் இறப்பு குறித்து தாண்டிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை தொடங்கினர். மேலும் பிரித்திகாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக புத‌ன்  இரவு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

  Also Read:  தில்லையில் தேரோடலைன்னா மன்னனுக்கு கேடு.. அரசு புரிஞ்சு நடக்கனும் - ஹெச்.ராஜா

  திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன், பழநி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அன்று இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததையடுத்து உடலை வாங்கிச்சென்று திண்டுக்கல் மின்மயானத்தில் தகனம் செய்தனர். இந்நிலையில் மாணவியின் இறப்பு குறித்து விசாரிக்க திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி.,கள் லாவண்யா, சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிர‌மாக‌ முடுக்கிவிடப்பட்டுள்ளது.

  பாச்சலூர் பள்ளி அருகே மாணவி கருகிய நிலையில் கிடந்த இடத்தை திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததை தொட‌ர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை  ப‌ள்ளி வ‌ளாக‌ப்ப‌குதியை சுற்றி சேகரித்து வ‌ருகின்ற‌ன‌ர். மாணவியின் இறப்பை தொடர்ந்து போலீஸார் தடயங்களை சேகரிக்க ஏதுவாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள‌து. ச‌ம்ப‌வ‌த்த‌ன்று  பள்ளியில் பணிபுரிந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் போலீஸார் புத‌ன் இரவு முதல் த‌ற்போது வ‌ரையிலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also Read: தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா..?- முதல்வருக்கு பறந்த புகார்

  இதில் ஒரு சில‌ ஆசிரிய‌ர்க‌ளை திண்டுக்க‌ல் க்ரைம் பிரான்ச்-க்கு அழைத்து சென்று விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர், மேலும் பாச்சலூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் சாதார‌ண‌ உடையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுமி உயிரிழ‌ந்த‌ ப‌ள்ளியின் அருகே உள்ள‌ குடியிருப்பு வாசிக‌ளிட‌மும் அந்த‌ப்ப‌ள்ளியில் ப‌யிலும் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ளிட‌மும் ஏடிஎஸ்பி லாவ‌ண்யா ம‌ற்றும் ஏடிஎஸ்பி ச‌ந்திர‌ன் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளின் மேற்பார்வையில் ஒவ்வொருவ‌ரிட‌மும் த‌னித‌னியாக‌ விசார‌ணை மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து.

  க‌ட‌ந்த‌ வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌ செய்தியாள‌ர்க‌ள் ச‌ந்திப்பில்  திண்டுக்க‌ல் ச‌ர‌க‌ டிஐஜி விஜ‌ய‌குமாரிஉடற்கூறு ஆய்வின் போது  வீடியோ காட்சி முழுமையாக பதிவு செய்து உள்ளதாகவும், சிறுமியின் உடலில் தீ காயங்கள் தவிர வேறு  எந்த காயங்கள் இல்லை என்றும்  பாலியல் தொந்தரவு செய்தற்கான தடயங்கள் இல்லை  என்றும் தீ காயத்தினால் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தார்.

  Also Read:  இளம்பெண்களை குறிவைத்து ஆபாச சாட்டிங்.. பள்ளி ஆசிரியையிடம் எல்லை மீறியதால் சிக்கிய நபர்

  உடற்கூறு ஆய்வு முடிவிற்காக காத்திருப்பதாகவும்,முடிவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், ச‌ந்தேக‌ ம‌ர‌ண‌மாக‌ வ‌ழ‌க்கு  ப‌திவு செய்ய‌ப்பட்டு அனைத்து கோண‌ங்க‌ளிலும் விசார‌ணை ந‌டைபெறுவ‌தாக‌ தெரிவித்திருந்தார். அத‌னை தொட‌ர்ந்து மூன்றாவ‌து நாளான‌ நேற்றும் நான்காவ‌து நாளான‌ இன்றும் அப்ப‌குதியில் தீவிர‌ விசார‌ணை மேற்கொள்ள‌ப்பட்டு வ‌ருகிற‌து.

  மேலும் ந‌க்ச‌ல் த‌டுப்பு பிரிவு போலீசாரும் பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தினை சுற்றியுள்ள‌ சுட‌லைப்பாறை, பேத்திரைப்பாறை, குர‌ங்க‌ணிப்பாறை, க‌டைசிக்காடு, பூதம‌லை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌லைக்கிராம‌ ம‌க்க‌ளிட‌மும் சிறுமி ச‌ந்தேக‌ ம‌ர‌ணம் குறித்து விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். இந்நிலையில் சிறுமி இற‌ந்து 4 நாட்க‌ளாகியும் விசார‌ணை முடிவுறாம‌ல் தொட‌ர்ந்து கொண்டே இருப்ப‌து இப்ப‌குதி ம‌க்க‌ளிடையே அதிருப்தியை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. மேலும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌குதியின‌ரை பெரும் சோக‌த்தில் ஆழ்த்தியுள்ள‌துட‌ன், ப‌ள்ளி அமைந்துள்ள‌ ப‌குதிக‌ளில் க‌ண்காணிப்பு கேம‌ராக்க‌ள் பொருத்த‌வும் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ளின் அச்ச‌ம் போக்க‌ விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என‌வும் கோரிக்கை எழுந்துள்ள‌து.

  செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக் (கொடைக்கானல்)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Dindigul, Girl Murder, Police, Police investigation

  அடுத்த செய்தி