திண்டுக்கலில் மும்மதத்தினர் கலந்துகொண்ட மதநல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து சிறிய அளவிலான விநாயகர் சிலையை வாங்கி, பலரும் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
அந்த வகையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மதநல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என 3 மதத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை!
அலுவலக வாயில் முன்பு 3 அடி உயரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து பொரி, சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் வகைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பின்னர் மதநல்லிணக்க வழிபாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல் வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.