போலீஸ் விசாரணையின்போது கைதி உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கு சிறை

prisoner

திண்டுக்கல் மாவட்டத்தில், காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சார்பு ஆய்வாளர் உட்பட மூன்று போலீசாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திண்டுக்கல் மாவட்டத்தில், காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சார்பு ஆய்வாளர் உட்பட மூன்று போலீசாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது  மொட்டணம்பட்டி கிராமம். கடந்த 2010ம் ஆண்டு இங்குள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றபோது  சுரேஷ் குமார் என்பவரை அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார், மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சுரேஷ் அளித்த புகாரில், வடமதுரை காவல் நிலைய போலீசார் செந்தில்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் செந்தில்குமார் உயிரிழந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுவதாக கூறி இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை வேண்டுமென இறந்து போன செந்தில் குமாரின் உறவினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார்  சார்பு ஆய்வாளர் முத்துசாமி, ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் தாக்கியதில் தான் செந்தில்குமார் உயிரிழந்ததாக கூறி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் படிக்க.. இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்திய சீனா

    இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சரவணன், சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை காவலர்கள் ஆகியோர் குற்றவாளி எனக் கூறி சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 11 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும், ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு தலைமை காவலரான அப்துல்வகாப் சாலை விபத்தில் உயிர் இழந்ததால் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: