நிலக்கோட்டையில் கல்லூரி மாணவியின் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் மற்றும் இன்னாள் காதலர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது திண்டுக்கல் ரெட்டை மலை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் காதல் மயக்கத்தில் அந்த கல்லூரி மாணவி தனது அந்தரங்க புகைபடங்களை சதீஷ்க்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் பிரிந்துள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் அந்த கல்லூரி மாணவிக்கு முகநூலில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் என்பவருடன் நட்பு கிடைத்தது. இந்த நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விஷயம் முன்னாள் காதலன் சதீசுக்கு தெரியவர ஏக கடுப்பிற்கு ஆளான சதீஷ் மற்றும் அவரது நண்பரான மைக்கேல் பாளையத்தை சேர்ந்த நெல்சன் அருணின் செல்போனை நம்பரை கண்டறிந்து கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மாஸ்க் அணியாத அரசு பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்களுக்கு அபராதம்!
இருவரிடம் இருந்த புகைப்படங்கள்அவர்களின் நண்பர்களான மைக்கேல்பாளையம் நெல்சன், தூத்துக்குடி விஷ்வா ஆகியோருக்கும் சென்றுள்ளது கைமாறிய படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் இது தொடர்பாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. காதல் மனைவியை அடித்துவிரட்டிய கணவன் - குழந்தையுடன் நடுத்தெருவில் நிற்கும் பெண்
அதனடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திண்டுக்கல் சதீஷ், மைக்கேல் பாளையம் நெல்சன், தூத்துக்குடி அருண், விஷ்வா ஆகியோர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய சதீஷ், நெல்சன் ஆகியோரை கைது செய்த போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், விஸ்வா, ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சங்கர் - திண்டுக்கல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.