பாஜகவின் முழு சங்கியாக
சீமான் செயல்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் கூண்டோடு ராஜினாமா செய்த நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர், நாம் தமிழகர் கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில்
திமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகரன் இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி தொகுதி செயலாளர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் டேவிட் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள், நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு காலி செய்து திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் வினோத் ராஜசேகரன் செய்தியாளரிடம் பேசுகையில், பிஜேபியின் சங்கியாக மாறி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செயல்பட்டு வருகிறார். பொதுக் கூட்டங்களில் பேசும் பொழுது பிஜேபியை பற்றி தவறாக பேசக்கூடாது என்றும் கூறிவருகிறார்.
மேலும் தற்பொழுது ஜாதி ரீதியாக அரசியல் செய்து வருகிறார். கட்சியில் ஒருவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்றாலோ தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றாலும் அவரது ஜாதியை பார்த்து தான் அவர் செயல்படுகிறார். இவரை நம்பி ஏராளமான இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து கொண்டுள்ளனர்.
Must Read : மருத்துவ படிப்பில் சேரும் விவசாயி மகள்... கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
ஆகவே நாங்கள் மண் மீது வீடு கட்ட விரும்ப வில்லை. பாறை மீது வீடு கட்ட விரும்புகின்றோம் ஆகையால் தற்பொழுது சரியான இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம் என கூறினார்.
செய்தியாளர் : ஆர்.சங்கர். திண்டுக்கல். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.