Home /News /tamil-nadu /

சாராய குடோனை காட்டிக்கொடுத்த விவகாரம்.. வாலிபர் தலை துண்டித்து கொலை - திடுக்கிடும் தகவல்

சாராய குடோனை காட்டிக்கொடுத்த விவகாரம்.. வாலிபர் தலை துண்டித்து கொலை - திடுக்கிடும் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சட்ட விரோதமாக நடைபெற்ற சாரய குடோனை காட்டி கொடுத்த காரணத்திற்காக திண்டுக்கல் வட்டப்பாறையில் தலையை வெட்டி கொலை செய்ததாக  குற்றவாளிகள் வாக்குமூலம்.  

  திண்டுக்கல்லில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டீபன் ராஜ் என்பவர் தலை தனியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.

  திண்டுக்கல் மாவட்டம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்.  இவருக்கு மார்க்கரேட் (வயது 32) என் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் விபச்சார வழக்கில் கைதாகி பல குற்றச் செயல்களுக்காக குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். சிறையில் இருக்கும் பொழுது, கொலை வழக்கில் கைதான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த சரவணன் என்பவர் பழகி நண்பரானார்.

  சிறையில் இருந்து  வெளியே வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியை‌ சேர்ந்த திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இன்பராஜ் என்பவருடன் சரவணனை, ஸ்டீபன் ராஜ்  நண்பராக அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இன்பராஜ் தோட்டத்து வீட்டில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மது பாட்டில்களை வைத்து வியாபாரம் செய்துள்ளனர்.

  Also Read:  நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் குழப்பம்

  குறிப்பாக கொரோனா காலத்தில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட பொழுது இவர்கள்தான் மாவட்டம் முழுவதும் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் இன்பராஜூம் சரவணனும் மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர். ஒரு கட்டத்தில் ஸ்டீபன்ராஜை  கூட்டணியிலிருந்து விடுவித்தனர். அதன் காரணமாக மூன்று மாதத்திற்கு முன்பு இன்பராஜ் மற்றும் சரவணனிடம் உங்கள் நட்புக்கு நான்தான் மூலக்காரணம் என்னையே விலக்கி விட்டீர்கள்,உங்களை ஒரு வழி பண்ணுகிறேன் என சவால்விட்டு மிரட்டியுள்ளார்.

  இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் வட்டப் பாறையில் உள்ள இன்பராஜீன்தோட்டத்து வீடான சாராய குடோனை சோதனை செய்ததில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் 20 லட்சம் மதிப்பிளான  பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இன்பராஜ், கோமதி சங்கர், கொங்கேஸ்வரன், பிரபு சிவா, சங்கு பாண்டி ஆகிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் காளையார்கோயில் சரவணன் தப்பி தலைமறைவாகி விட்டார்.

  அன்று மாலை ஸ்டீபன்ராஜை, இன்பராஜின் குடோனில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும்  மூன்று கொலை வழக்குககளில் தொடர்புடைய மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல்  என்பவர் சாராயம் குடிக்க அழைப்பு விடுத்துள்ளார். அன்று மாலையே ஸ்டீபன் ராஜ் வட்டப்பாறை சாராயக் கடைகளுக்கு சென்றுள்ளார். அப்போது வட்டப்பாறை அருகே உள்ள சாமியாரைப் பட்டியைச் சேர்ந்த மன்மதன், கார்த்திகேயன், சங்கரபாண்டி, மருதீஸ்வரர், ராம்குமார், மணிகண்டராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஸ்டீபன்ராஜின் தலையை தனியாக வெட்டி  1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் தூக்கி போட்டு சென்றுவிட்டனர்.

  Also Read: திமுகவின் வீரபாண்டி ராஜா காலமானார்!

  இதில் மேற்கூறிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சட்ட விரோதமாக நடைபெற்ற சாரய குடோனை காட்டி கொடுத்த காரணத்திற்காக தலையை வெட்டி கொலை செய்ததாக  குற்றவாளிகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  இந்த சம்பவத்தில் மன்மதன் மட்டும் போலீசார் விரட்டிச் செல்லும் பொழுது திண்டுக்கல் கரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.  சாராய குடோனின்   மேற்பார்வையாளர் சக்திவேலை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தப்பியோடிய காளையார்கோவில் சரவணனை கைது செய்தால்தான் கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

  செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Death, Murder

  அடுத்த செய்தி