தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம் ஒட்டன்சத்திரம் ஆகிய 3 இடங்களில் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று 3 இடங்களில் நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் ஒட்டன்சத்திரத்தில் 697 குடும்ப அட்டைகள் உட்பட மூன்று இடங்களிலும் 1500 நபர்களுக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து இலவச வீட்டு மனைப்பட்டா உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் பேட்டியளித்த உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் பல ஆண்டுகளாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருந்தது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்ற இடைத் தரகர்களிடம் ஏமாறும் மக்கள்- எளிமையான வழி இதோ!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த இரண்டு மூன்று தினங்களாக சுமார் 3 லட்சம் குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது இவ்வளவு ஈசியா?
மேலும் 4 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.