Home /News /tamil-nadu /

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி..

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி..

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி

Dindugal Mayor Ilamathi | இளமதி மேயருக்கான கவுன் அணிந்து 110 பவுன் தங்கச் செயின் அணிந்து வந்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி பதவி ஏற்றுள்ளார்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக பெருவாரியாக இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது.  இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக இளமதி அறிவிக்கப்பட்டார்.

    Also Read: திமுக கவுன்சிலர்கள் கடத்தல்.. வெடித்த கோஷ்டி பூசல்.. மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி.. பரபரக்கும் கடலூர்..

    திண்டுக்கல் மாநகராட்சியின் 23 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதி மேயர் வேட்பாளர் என திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. இதனையடுத்து இன்று  காலை இளமதி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஒரு மனதாக இளமதி முதல் பெண் மேயராக  தேர்வு செய்யப்பட்டார்.

    இதனையடுத்து மேயருக்கான கவுன் அணிந்து  110 பவுன் தங்கச் செயின் அணிந்து வந்தார். இவரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அழைத்து வந்து மேயர் இருக்கையில் அமர வைத்தனர். அப்பொழுது அரங்கத்தில் கூடியிருந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கரவொலி எழுப்பி  வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dindugal, Local Body Election 2022

    அடுத்த செய்தி