ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் நாற்காலியை வீசி உறுப்பினர்கள் வாக்குவாதம்!

வாக்குவாதம்

தலைவர் மற்றும் துணைத் தலைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதால் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

  • Share this:
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மற்றும் திமுக ஆதரவு பா.ம.க-சுயேச்சை உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்  ஏற்பட்டு நாற்காலியை எடுத்து  வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 20 உறுப்பினர்களில் பத்து அதிமுக, ஒரு பாகமாக இரண்டு சுயேச்சைகள் என ஆதரவுடன்  தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில்  அதிமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன் தனது  உறவினர் ரெஜினா நாயகத்தை  தலைவராக ஆக்கிக்கொண்டு ஊராட்சி ஒன்றியத்தில்  பல திட்டங்களில் முறைகேடு செய்து  வருவதாகவும்  சுயேச்சை உறுப்பினர்கள் பா.மக உறுப்பினர் உட்பட  திமுக உறுப்பினர்களின் வார்டுகளுக்கு தேவையாக நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் திமுகவிற்கு ஆதரவு அளித்து கடந்த இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர். ஊராட்சி கூட்டமும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று  ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதையும் படிங்க: சி.ஏ.ஏ. விவகாரம்: அவையை கலகலப்பாக்கிய சபாநாயகர் அப்பாவு!


    கூட்டத்தில் இருதரப்பினரும் கலந்து கொண்டதை அடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், அதிமுக சின்னத்திலும் அதிமுக ஆதரவோடும்  வெற்றி பெற்றவர்கள் தற்போது திமுகவிற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நின்று வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவு அளித்துக்கொள்ளுங்கள் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள், சுயேச்சைகள், பாமகவினர் கூட்டத்தில் நாற்காலி வீசி ரகளையில் ஈடுபட்டனர் பதிலுக்கு அதிமுகவினரும் அவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கூட்டத்தை புறக்கணித்து திமுக மற்றும் ஆதரவு சுயச்சை பாமக உறுப்பினர்கள் வெளியேறினர் .

    மேலும் படிக்க: அன்னூர் விவகாரத்தில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்: சிபிசிஐடி விசாரணை நடத்த கோரிக்கை!


    தலைவர் மற்றும் துணைத் தலைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதால் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் ஒன்றிய துணைத் தலைவரும் அதிமுக செயலாளருமான யாகப்பன் சுமார் ஒரு கோடி அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாகவும் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும்  வெளியேறிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: