தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானதையடுத்து பொருட்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இம்மாதம் 24ம் தேதி வரை முழு
ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு இன்றும் நாளையும் இரவு 9 மணிவரை கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனினும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக, முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நேரத்தில் இருந்து பொதுமக்கள் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் அதிகளவு குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே மக்கள் இரண்டு வாரத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வைக்க மார்க்கெட்டில் குவிந்தனர். இதனையடுத்து காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த மளிகைக்கடைகளில் வியாபாரிகள் பொதுமக்கள்கூட்டம் அலைமோதியது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கின. கிட்டத்தட்ட2 மணி நேரம் இந்த நெரிசல் நீடித்தது. இதனால் பொதுமக்களே இறங்கி வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மார்க்கெட் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தவோ மாநகராட்சி அதிகாரிகளோ காவல்துறை அதிகாரிகளோ அங்கு வரவில்லை என்றும் இதனால்
தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.