முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முந்தைய ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்

முந்தைய ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் வழங்கி உள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட ரூ.3 இலட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கூட்டுறவுத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடி தொடர்பாக பணிகளில் கூட்டுறவு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே கூட்டுறவுத்துறையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சில இடங்களில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட பொட்டலங்களைஆய்வு செய்தபோது அதில் நகை இல்லாதது தெரியவந்தது. இதேபோல், ஒரே நபர் பல நகை  கடன்கள்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி , “கூட்டுறவுத்துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், விதிமீறல்கள் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யபடும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: நேரம் காலம் பார்த்து குழந்தையை முன்கூட்டியே பெற்றெடுப்பது தவறு - மா.சுப்பிரமணியன்

நகைக் கடன்

மேலும், “ முறைகேடுகள், விதிமீறல்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை அரசு எடுக்கும். நகை இல்லாமல் கடன் வழங்கபட்டு உள்ளது, சங்கங்களில் நகை இல்லை, கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கி உள்ளனர். மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளுக்கு 500க்கணக்கான கடன்கள் வழங்கபட்டுள்ளது. நிறைய விதிமீறல்கள் நடைபெற்று உள்ளது.  இவையெல்லாம் சங்கங்களில் வங்கிகளில் ஆய்வு செய்யபட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பயிர்கடன் சம்மந்தமாக ஆய்வு செய்த போது குறிபிட்ட பகுதிகளில் தான் இந்த கடன் அதிகமாக வழங்கபட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் வழங்கி உள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட ரூ.3 இலட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர்.  தரிசு நிலங்களுக்கு கடன் வழங்கி உள்ளனர். ஒரு அளவு இல்லாமல் அவர்கள் இஷ்டபடி கடன் வழங்கி உள்ளனர். நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் கொடுக்கபட்டு உள்ளது. குவாரி நிலங்களுக்கு கடன் வழங்கி உள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cooperative bank, Dindigal, Gold loan